காதலனை மறக்க அவகாசம் கேட்ட பெண் மாயம்! போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

கோவை: காதலனை மறக்க அவகாசம் கேட்ட இளம்பெண் மாயமானார். இதையடுத்து பெண்ணை மீட்ட போலீசார் அவருக்கு அறிவுரைகூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: காதலனை மறக்க அவகாசம் கேட்ட இளம்பெண் மாயமானார். இதையடுத்து பெண்ணை மீட்ட போலீசார் அவருக்கு அறிவுரைகூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருப்பூரில் வேலைபார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். பல்வேறு இடங்களுக்குச் சென்று சந்தித்துக்கொண்ட அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைக்கலாம் என மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். ஆனால் அந்தப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார். எனவே அவருக்கு பெற்றோர் அறிவுரை கூறினர்.

இதையடுத்து அந்தப் பெண் காதலனை மறக்க சில நாட்கள் அவகாசம் கேட்டார். இந்நிலையில் இளம்பெண் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் திருப்பூரில் உள்ள தோழி வீட்டில் இருப்பதாக கூறினார். உடனே அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரைகூறி பெற்றோரிடம் அனுப்பிவைத்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...