கோவை: கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக வால் போஸ்டர் ஒட்டிய தி.மு.க.வினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் கிராம சபைக் கூட்டம் மூலம் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டும் வருகிறார்.
தி.மு.க சார்பில் கிராமங்கள் தோறும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் சேதுராமன் தலைமையில் தி.மு.க.வினர் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது குறித்து சுவரொட்டிகள் ஒட்டி வந்தனர்.
ஊரடங்கு இருக்கும் நிலையில் அதை மீறியதாக தி.மு க.வினர் 30 பேர் மீது தொற்று நோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.