திருப்பூரில் மயக்க நிலையில் 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண்..! பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்!

திருப்பூர்: திருப்பூரில் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகேயுள்ள தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் படுத்துக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் சேவூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்து, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, சிறுமி விட்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு கடுமையான காயங்கள் உள்ளன. வசதியான வீட்டு குழந்தை போல் ஆடைகள், காலணி அணிந்துள்ளார். அவரை யாரும் கடத்தி வந்தனரா, வேறு காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை.

முதற்கட்டமாக குப்பைக் கிடங்கு அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றின் பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி மற்றும் முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியில் சாலையில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண்ணை இருவர் காரில் ஏற்றிச் சென்றதாகவும் பொதுமக்களில் சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் யார், சிறுமி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களை சேகரிக்க பிற காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...