ஆட்சியில் இருந்தபோது கிராமசபைக் கூட்டங்களை மக்கள் நலனுக்காக நடத்தாத திமுக, தற்போது அரசியலுக்காக நடத்துகிறது - சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: ஆட்சியில் இருந்தபோது கிராமசபைக் கூட்டங்களை மக்கள் நலனுக்காக நடத்தாத திமுக, தற்போது அரசியலுக்காக நடத்தி வருவதாக திருப்பூரில் பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.



திருப்பூர்: ஆட்சியில் இருந்தபோது கிராமசபைக் கூட்டங்களை மக்கள் நலனுக்காக நடத்தாத திமுக, தற்போது அரசியலுக்காக நடத்தி வருவதாக திருப்பூரில் பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.



பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் பாஜக சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ரத்த தானம் வழங்கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தாமரை மலருமா என்று கேட்டவர்கள் மத்தியில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் நிச்சயம் இந்த கூட்டணி வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை ஆட்சியில் இல்லாததுபோல் திமுக திடீரென மக்கள் நலனுக்காக கிராமசபைக் கூட்டம் நடத்துவது போல பாவனை செய்வதாகவும் ஆட்சியில் இருந்தபோது முறையாக கிராமசபை கூட்டங்களை திமுக நடத்தவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர் எனவும், வெவ்வேறு கட்சிக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருப்பது போல தமிழக பாஜகவின் கருத்துக்கள் சில நேரங்களில் முரண்பட்டது போல தெரியலாம். ஆனால், மத்திய தலைமையின் கீழ்தான் மாநில பாஜக தலைமை செயல்பட்டு வருவதாகவும் இதனை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...