கோவையில் பொதுமக்களின் தொடர் புகாரால் ஊராட்சி செயலாளர் இடமாற்றம்!

கோவை: கோவை அன்னூர் அருகே பொதுமக்களின் தொடர் புகார்கள் காரணமாக ஊராட்சி செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.


கோவை: கோவை அன்னூர் அருகே பொதுமக்களின் தொடர் புகார்கள் காரணமாக ஊராட்சி செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சி செயலராக பணிபுரிந்தவர் வசந்த கோகிலம். இவர் மீது ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வடுகபாளையம் பழனிச்சாமி, ஆலம்பாளையம் ராஜாமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி உதவி இயக்குனரிடமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் புகார் மனு அளித்தனர்.

குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சியில் விதிகளை மீறி தொழிற்சாலைகளுக்கு கட்டிட அனுமதி வழங்கியது. பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு, ஆழ்குழாய் கிணறு மற்றும் தூய்மைப் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டது, தார்சாலை அமைக்காமலேயே நிதி இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்களை சில வாரங்களுக்கு மனு அளித்தனர்.

மேலும், ஊராட்சியில் முறைகேடு செய்து வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர் இன்று நாரணபுரம் ஊராட்சி செயலர் வசந்த கோகிலாவை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். நாரணபுரம் ஊராட்சிக்கு காட்டம்பட்டி ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...