கோவை: தமிழக - கேரள எல்லையில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 கேரளா லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக கேரள எல்லையான வாளையார் வழியாக நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோதமாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் தமிழக எல்லை வழியாக கேரளாவிற்கு லாரிகள் இயக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் இரவு நேரங்களில் மதுக்கரை சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ், காக்கா சாவடி சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி உள்ளிட்ட போலீசார் அடிக்கடி அந்த பகுதிக்குச் சென்று அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் உரிய அனுமதி இன்றி செல்லும் வாகனங்களைப் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பேரூர் சரக டிஎஸ்.பி சீனிவாசலு, வ.டவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கோவையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கருங்கல் பாரத்தை ஏற்றி வந்த 5 கேரள டிப்பர் லாரிகளை போலீசார் பிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும், 5 லாரிகளும் காக்கா சாவடி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.