கோவை வடக்கு மண்டலத்தில் 38 மற்றும் 39வது வார்டுகளில் கூடுதலாக பொதுக்கழிப்பிடங்கள் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் கூடுதலாக பொதுக்கழிப்பிடங்கள் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் கூடுதலாக பொதுக்கழிப்பிடங்கள் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38 மற்றும் 39வது வார்டுகளில் உள்ள ஏ.டி காலனி, எல்லை தோட்டம் ரோடு, நேரு நகர் வீதிகள், பயனீர் மில் ரோடு, சிஎம்சி காலனி, பொறிக்கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களில் 40 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுக்கழிப்பிடங்களை கூடுதலாக கட்டித்தரக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பீளமேடு பகுதி ம.தி.மு.க செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், சி.எம்.சி காலனி, எல்லை தோட்டம் ரோடு சந்திப்பு, பொறிக்கடை சந்து, வெங்கலம் குட்டை பகுதியில் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நான்கு இடங்களில் மட்டுமே பொதுக்கழிப்பறை உள்ளது. கழிப்பிட வசதி போதுமானதாக இல்லாததால் பீளமேடு பாரதி காலனி பகுதியில் உள்ள காட்டு பகுதியை இங்கு வசிக்கும் மக்கள் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக உபயோகப்படுத்தி வருகிறார்கள். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இதை ஆய்வு செய்து உரிய முறையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...