வட்டிப்பணம் ஆசை காட்டி மும்பை பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது!

கோவை: தினம் தினம் வட்டி தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி மும்பையைச் சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.


கோவை: தினம் தினம் வட்டி தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி மும்பையைச் சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மோனிகா அபே ஜெயின் (வயது 35). இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் ட்ரீம் `மேக்கர்ஸ் குளோபல்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அவர்கள் நிதிநிறுவனம் நடத்தி வருவதாகவும் எவ்வளவு பணம் செலுத்தினாலும் அதற்கு தினமும் 1.5 சதவீதம் வட்டி தருவதாகவும் கூறினர். அதை நம்பி நான் 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி வட்டித்தொகையை தரவில்லை. அத்துடன் முதலீட்டுத் தொகையை தராமல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். அதன்படி சதீஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். குணவதியை தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் யார், யாரிடமெல்லாம் பணம் பெற்று மோசடி செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...