அறிவுரை வழங்கிய போலீசுக்கு சரமாரி அடி: அண்ணன் - தம்பி கைது!

கோவை: மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அண்ணன் தம்பிகளுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அண்ணன் தம்பிகளுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் மாசாணி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை போலீஸ்காரர் கணபதி மெதுவாகப் போகுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ்காரரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து போலீஸ்காரருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இரண்டு பேரும் சேர்ந்து அறிவுரை வழங்கிய போலீஸ்காரர் கணபதியை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கணபதி புகார் செய்தார். அதன்பேரில் இரண்டு பேரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் ஆனைமலையைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சந்தோஷ்குமார், மணிகண்டன் என்பது தெரியவந்தது.

கொலை மிரட்டல் விடுத்ததுடன் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொள்ளாச்சி ஜே.எம்-1 மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...