தி.மு.க நிர்வாகி தூக்கில் தொங்கினார்: மனைவியை மிரட்ட ஆடிய நாடகம் உயிரைப் பறித்தது!

கோவை: மனைவியை மிரட்ட தூக்கில் தொங்குவதுபோல நடித்த தி.மு.க. நிர்வாகி கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.


கோவை: மனைவியை மிரட்ட தூக்கில் தொங்குவதுபோல நடித்த தி.மு.க. நிர்வாகி கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.

பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). பழைய இரும்பு வியாபாரியான இவர் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வெங்கடேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது.

கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து வெங்கடேசன் தனி அறைக்குச் சென்றார். பின்னர் மனைவியை மிரட்டுவதற்காக மெத்தைமீது சிறிய நாற்காலியை வைத்து அதன் மீது ஏறி மின்விசிறியில் தூக்குப் போடுவதுபோல நடித்தார். அப்போது நாற்காலி தவறி கீழே விழுந்ததில் கழுத்தில் மாட்டிய துணி இறுக்கியது. வலி தாங்க முடியாததால் அலறல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அவரது மனைவி ஓடிவந்து தூக்க முயன்றார். ஆனால் அவரால் வெங்கடேசனை தூக்க முடியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெங்கடேசனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

மனைவியை மிரட்ட தூக்கு போடுவதுபோல் நடித்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...