கோவை மத்திய சிறை வாசலில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பெண் போலீஸ் தவறவிட்டவை; உரிய விசாரணைக்குப்பின் ஒப்படைப்பு!

கோவை: கோவை மத்திய சிறை வாசலில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் உரிய விசாரணைக்குப் பிறகு கோபிசெட்டிபாளையம் பெண் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறை வாசலில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் உரிய விசாரணைக்குப் பிறகு கோபிசெட்டிபாளையம் பெண் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை வ.உ.சி பூங்கா சாலையில் மத்திய சிறையின் நுழைவு வாயில் உள்ளது. நேற்று மத்திய சிறையின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையோரத்தில் 5 துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தோட்டாக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த துப்பாக்கி தோட்டாக்கள், கைதிகளை ஆஜர்படுத்த வரும் போலீசார் பயன்படுத்தும் பாயிண்ட் 410 மஸ்கட் ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, தோட்டாக்களை விட்டுச் சென்றது யார் என ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு வந்த பெண் போலீஸ் தவற விட்டுச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார், தோட்டாக்களை தவறவிட்ட பெண் போலீசிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...