கோவை ரத்தினபுரி அருகே மின்சார வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவை ரத்தினபுரி அருகே மின்சார வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ரத்தினபுரி அருகே மின்சார வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்ப நகரைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மகன் ஸ்ரீதர் (17). இவர் கணபதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீதர் வடவள்ளி வி.என்.ஆர் நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுவர்கள் அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த மின்சார வயரை மரக்குச்சியால் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீதர் திடீரென என்னை எல்லாம் மின்சாரம் தாக்காது என கூறிக்கொண்டு மின்சார ஒயரைபிடித்தார்.

இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஸ்ரீதரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...