அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பேராசிரியர் கல்யாண சுந்தரம் விளக்கம்!

கோவை: அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி முன்னாள் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.


கோவை: அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி முன்னாள் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி முன்னாள் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் இன்று அ.தி.மு.கவில் இணைந்தார். அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகப்போவதாக கடந்த பல நாட்களாகவே செய்திகள் பரவி வந்த நிலையில் இன்று அ.தி.மு.கவில் இணைந்தார்.

அ.தி.மு.க.வில் இணைந்தபின் பேராசிரியர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களைச் உசந்தித்தார். அப்போது ஒரு கூறியதாவது:-

“உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து கலந்து பேசி முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்துள்ளேன். நாம் தமிழர் கட்சியில் எங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மக்கள் நலன் பேணும் கட்சியில் இணைய வேண்டும் என்பதால்தான் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

சாதிய, மதவாத சிந்தனையற்ற அனைத்து மக்களுக்கான இயக்கம் என்பதால் அ.தி.மு.கவில் இணைந்துள்ளேன். ஈழத்தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ், தி.மு.க.வின் போலி பொய் பரப்புரைகளிலிருந்து அ.தி.மு.க.வை காக்கும் அரணாக நிற்போம்.

நாஞ்சில் சம்பத், லியோனி போன்றோரை வைத்து தரமற்ற பொய் பரப்புரைகளை தி.மு.க. மேற்கொள்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு, ஏழு தமிழர் விடுதலைக்கான தொடர் முயற்சி, மினி கிளினிக் என ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...