சின்னாம்பாளையம் பகுதி ரிசர்வ் சைட்டில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் புகார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியில் ரிசர்வ் சைட்டில் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியில் ரிசர்வ் சைட்டில் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில், ராஜ் நகர் விரிவாக்கம் 2 மற்றும் 3, ராம்ராஜ் நகர், வசந்தம் நகர், சிற்பி நகர் மற்றும் அஸ்வின் கார்டன் ஆகிய குடியிருப்புகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் குப்பைகளை தீ வைப்பதாலும், சுகாதாரமற்ற பொதுக் கழிப் பிடத்தாலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விஷப்பூச்சிகளும், பன்றிகளும் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் ராம்ஸ் நகர், ராஜுநகர், அஸ்வின் கார்டன், மற்றும் அண்ணாநகர் குடியிருப்புகளின் மையப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கு அமைத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் குப்பை மற்றும் கழிவுகளை தினமும் சேகரித்து தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதியில் புகை சூழ்வதால் துர்நாற்றம், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயதான மற்றும் இதய நோயாளிகள், குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

ஊராட்சியில் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே மக்களுக்கு பாதிப்பின்றி குப்பைக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...