திருப்பூர்: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார் என்று அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்தொழுவு, பொல்லிக்காளிபாளையம், கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று மூன்று இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளிக்கை தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், `வருகிற 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வார்' என்றார். அப்போது, 'வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத்தான் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுகிறதா' என அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் எல்லா வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது போலவே இந்த வருடமும் வழங்கப்படுகிறது' என்றார்.