பொள்ளாச்சி: பாரம்பரிய வீர விளையாட்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்களை வீர விளையாட்டாக கருதி நடத்தி வருகின்றனர்.

தாங்கள் வைத்திருக்கும் காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையிலும், பாரம்பரிய காளை இனங்களை பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக ரேக்ளா பந்தயங்கள் நடைபெறவில்லை.
தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டல விவசாயிகளின் நண்பனாக விளங்குகின்ற காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் ரேக்ளா பந்தயம் களைகட்டியுள்ளது.

இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், மணல்மேடு பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் காளைகள் பங்கேற்றன. இரண்டு பல் காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும், 4 பல் காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் போட்டி நிர்ணயிக்கப்பட்டது. தூரத்தை கடக்க துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த காளைகளை, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும், போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது, துன்புறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போட்டி நடத்தப்பட்டன. கொங்கு மண்டல விவசாயிகள் ரேக்ளா பந்தயங்களை பாரம்பரியமாக நடத்தி வருவதால், இந்த போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.