கோவை மாங்கரை அருகே கருங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை!

கோவை: கோவை மாங்கரை அருகே கருங்கல் ஏற்றிச் சென்ற லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.


கோவை: கோவை மாங்கரை அருகே கருங்கல் ஏற்றிச் சென்ற லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.



கோவையில் இருந்து கருங்கல் ஏற்றி கொண்டு ஆனைக்கட்டி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மாங்கரை அடுத்த மலைப்பாதையில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க லாரின் ஓட்டுநர் லாரியை இடது புறமாக திருப்பி உள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், லாரி பள்ளத்தில் சிக்கியது. 

இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தில் விழுந்த லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக ஆனைகட்டி பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, மலைப்பாதையின் ஓரத்தில் போடப்படும் பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாகவும் மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி வரை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...