கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் ஒப்பாரி!

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவையாக எரிபொருள்கள் உள்ள நிலையில் மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மானியத்தை விட்டுத் தர மத்திய அரசு கேட்டுக் கொண்டதையடுத்து சிலர் அதனை விட்டுக் கொடுத்தனர். 

இந்நிலையில் மற்றவர்களுக்கு வங்கிகளில் மானியத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதனை மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஒரு சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்தில் மத்திய அரசு 100 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று இரவு கோவை ஆவாரம்பாளையம் பகுதி நேதாஜி நகர் பகுதியில் கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும் விறகு அடுப்பு எரித்தும் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...