பாம்பு கடித்து விவசாயி மனைவி சாவு; ஆடிட்டர் மாயம்!

கோவை: கோவையில் பாம்பு கடித்து விவசாயி மனைவி பரிதாபமாக இறந்தார். மதுக்கரையில் ஆடிட்டர் மாயமானார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை: கோவையில் பாம்பு கடித்து விவசாயி மனைவி பரிதாபமாக இறந்தார். மதுக்கரையில் ஆடிட்டர் மாயமானார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், புதுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது39). நேற்றுமுன்தினம் இவர்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுந்தராம்பாளின் வலது காலில் பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. இதனால் வலியால் துடித்த அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை வடக்கு காந்தி நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மரியா லிடியா மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆடிட்டரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...