கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் குவிந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நூற்றுக்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.