கோவை ஆட்சியரின் உத்தரவை மீறி ரேஷன் கடை பூட்டை உடைத்து அத்துமீறல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பழங்குடி மக்கள் வலியுறுத்தல்!

கோவை: ஆட்சியரின் உத்தரவை மீறி ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அத்துமீறிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: ஆட்சியரின் உத்தரவை மீறி ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அத்துமீறிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ஆனைக்கட்டி பகுதியில் 23 செட்டில்மெண்ட் பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் ரேஷன் பொருட்கள்பெற ஆலமரமேடுப் பகுதியிலும் ஆனைக்கட்டி செக் போஸ்ட் அருகிலும் இரண்டு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நியாய விலைக் கடைகள் மூலமாக சுமார் 6000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இந்த இரு கடைகளையும் தட்சணா மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சின்ன ஜம்புகண்டி பெண்கள் குழுவினர் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடையின் பூட்டை உடைத்து ரேஷன் பொருட்களை அதிகாரிகள் வைத்துச் சென்றார்களாம்.



அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

இதுகுறித்து சுய உதவி குழுவினர் கூறுகையில், `நியாயவிலைக்கடையை சொசைட்டியே எடுத்து நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் மகளிர் சுய உதவிக்குழுவினரே இதனை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் காசோலை பெறச் சென்ற நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டிருக்கின்றன. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது' என்றனர்.



ஆட்சியர் அளித்த அனுமதியை மதிக்காமல் நடந்து கொண்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி காவல்துறை கண்காணிப்பாளர், உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோருக்கு ஆதிவாசிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...