கோவையில் 3-வது நாளாக பவுண்டரிகள் வேலைநிறுத்தம்: ரூ.90 கோடி உற்பத்தி இழப்பு!

கோவை: மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் கடந்த 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

கோவை: மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் கடந்த 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:

மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்றாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் ரூ.90 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்துக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், ‘‘கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பில் 19 தொழில் அமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...