வயிற்றுவலி, ஆஸ்துமாவால் அவதி; இளம்பெண், முதியவர் தற்கொலை!

கோவை: கோவையில் நோயினால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் மற்றும் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கோவை: கோவையில் நோயினால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் மற்றும் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராக்கப்பன் மகள் உஷா (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த உஷா, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை மூடிக்கொண்டு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல சரவணம்பட்டி அருகே உள்ள ஜனதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். மார்கழி பனிக் காலம் என்பதால் இவருக்கு மூச்சுவிடுவதில் கூடுதல் தொந்தரவு ஏற்பட்டது. மேலும், இவரைப் பராமரிக்க உடன் யாரும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...