கோவையில் மூன்று மடங்கு அதிகரித்த காற்றின் ஈரப்பதம்..! உச்சத்தை எட்டிய குளிர் மற்றும் பனி..!

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு மழை ஓய்ந்த பின்னர், கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு மழை ஓய்ந்த பின்னர், கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, காற்றின் ஈரப்பதம்  67 சதவீதமாக இருந்தது. வழக்கமான நாட்களில் ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம்தான் இருக்கும். ஆனால், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. மார்கழி, தை மாதம் வரை பனி மூட்டமும், கடுங்குளிரும் இருக்கும், என வேளாண் வானிலைத் துறை தெரிவித்துள்ளது. 

மார்கழி துவங்கும் முன்பே கடும் குளிர் வாட்டி வருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, வன மற்றும் மலை எல்லையோர கிராமங்களில் பனி மூட்டத்தால் 7 மணிக்குப் பிறகே விடியல் தெரிகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை இருக்கிறது.

குறிப்பாக மதுக்கரை, நீலாம்பூர் பைபாஸ், அவிநாசி ரோடு, துடியலூர் ஆகிய பகுதிகளில் பனிமூட்டத்தால் சாலை சரிவர தெரியாததால், பெரும்பாலான சரக்கு லாரிகள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...