தரமற்ற கையுறை தயாரித்து 98 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது!

கோவை: தரமற்ற கையுறை தயாரித்ததுடன் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகளை கொடுத்து ரூ. 98 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: தரமற்ற கையுறை தயாரித்ததுடன் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகளை கொடுத்து ரூ. 98 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கையுறை வழங்கி வந்தது. இதற்காக கோவை கவுண்டம்பாளையத்தில் இயங்கிவரும் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்திடம் கடந்த மே மாதம் 98 லட்சம் ரூபாய்க்கு தவணை முறையில் கையுறை வாங்கியது.

இந்நிலையில் அந்த கையுறைகள் அனைத்தும் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. மேலும் அவற்றை பரிசோதித்துப் பார்த்ததில் அவை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹித் என்பவர் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் கீதா அகர்வாலிடம் தங்கள் நிறுவனம் அளித்த ரூபாய் 98 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் கீதா அகர்வால் மற்றும் அவரின் கூட்டாளி பாலாஜி என்பவர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ரோகித் புகார் அளித்தார்.

வழக்கை விசாரித்த உதவி ஆணையர் உத்தரவின்பேரில் அப்பாதுரை கீதா அகர்வால் மற்றும் பாலாஜியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...