திருப்பூர் மங்கலம் பகுதியில் சேறும் சகதியுமாக காணப்படும் சாலைகளில் திமுகவினர் நாற்று நட்டு நூதன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலையில் மிகவும் மோசமடைந்து காணப்பட்ட சாலையில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திமுகவினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலையில் மிகவும் மோசமடைந்து காணப்பட்ட சாலையில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திமுகவினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து சின்னாண்டிபாளையம் பிரிவு வரை பாதாள சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒரு வருடமாகியும் சரிவர மூடாததால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இந்த சாலை திருப்பூரிலிருந்து மங்கலம் வழியாக பல்லடம் மற்றும் கோவை செல்வதற்கு பிரதான சாலையாக இருந்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி இன்று திமுக சார்பில் குளத்துப்புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.



மேலும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் சேறும் சகதியுமான சாலையில் திமுகவினர் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சாமிநாதன், ஆமை வேகத்தைக் காட்டிலும் மெதுவாக பணிகள் நடந்து வருவதாகவும் இதை போர்க்கால அடிப்படையில் செய்யாவிடில் தலைமை கழகத்தின் உத்தரவைப் பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...