விஷ கிழங்கு சாப்பிட்ட இளம்பெண் சாவு

கோவை: ஆற்றில் துணி துவைப்பதற்காகச் சென்ற இளம்பெண் அங்கிருந்த விஷ கிழங்கைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: ஆற்றில் துணி துவைப்பதற்காகச் சென்ற இளம்பெண் அங்கிருந்த விஷ கிழங்கைத் தின்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையம் சங்கர் நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கூலித்தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி (வயது 28), சம்பவத்தன்று செந்தில்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனலட்சுமி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பவானி ஆற்றுக்கு துணிகளைத் துவைப்பதற்காக சென்றிருந்தார். அங்கு தனலட்சுமி அருகிலிருந்த ஒரு செடியிலிருந்து கிழங்கைப் பிடுங்கிச் சாப்பிட்டதாக தெரிகிறது.

துணிகளை துவைத்து முடித்ததும் வீடு திரும்பிய அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் வயிறுவலி எடுக்கவே வலி தாங்க முடியாத தனலட்சுமி தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறினார். உடனே வீடுதிரும்பிய செந்தில்குமார் மனைவி தனலட்சுமியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் தனலட்சுமி சாப்பிட்டது விஷ கிழங்கு என்று கூறியதுடன் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...