சூதாட்டம், மது விற்பனை: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!

கோவை: சூதாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை: சூதாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 62, 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர அங்கு பதுக்கி வைத்திருந்த 650 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் நடந்த பகுதி கோமங்கலம் போலீஸ் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே இதுதொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத கோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனை, கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...