3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண் கைது!

கோவை: சூலூர் அருகே 3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை: சூலூர் அருகே 3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டினம்புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது 3 வயது குழந்தை நேற்று அருகிலுள்ள பூங்காவனம் என்பவரது வீட்டுக் காம்பவுண்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பூங்காவனம் குழந்தையை வெளியே போய் விளையாடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்தக் குழந்தை வெளியே போகாமல் அடம் பிடித்து தொடர்ந்து அங்கேயே விளையாடிக்கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பூங்காவனம் அருகே இருந்த கட்டையை எடுத்து குழந்தையைத் தாக்கியுள்ளார். இதில் குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதது.

குழந்தையின் சத்தம் கேட்டு அவரது தந்தை சுரேஷ்குமார் மற்றும் அருகே இருந்தவர்கள் ஓடிச் சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டுப் பெண் கட்டையால் தாக்கியது தெரியவந்தது. 

இதுகுறித்து அந்தப் பெண் மற்றும் வீட்டாரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சுரேஷ்குமார் சூலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பூங்காவனத்தை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...