காட்டு யானை தாக்கி இரவுக் காவலாளி பலி!

கோவை: காட்டு யானை தாக்கியதில் இரவுக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: காட்டு யானை தாக்கியதில் இரவுக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொன்னூத்து மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மலையடிவாரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது புகுந்து விடுவது வழக்கம். 

பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் வழியில் ஸ்ரீ நகர் பகுதியில் ஹாலோ பிளாக் கல் கம்பெனி ஒன்று உள்ளது. நேற்று இரவுப் பணிக்காக காவலாளி ஒருவர் இரவு 10 மணி அளவில் அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானை ஒன்று தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த நபர் கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 63) என்பது தெரியவந்தது. இவரது மனைவி பிரேமா ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகனும், புஷ்பா, சீதா என்ற மகள்களும் உள்ளனர். இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...