தெருவில் மோட்டார் சைக்கிள் ரேஸ்: தட்டிக்கேட்ட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது!

கோவை: தெருவில் மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டியபடி ரேஸில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: தெருவில் மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டியபடி ரேஸில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சூலூர் தெற்கு தேர் வீதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 22), தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ரேஸில் ஈடுபட்டனர். அப்போது தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மகேஸ்வரன் அந்த வாலிபர்களைத் தடுத்து நிறுத்தி `ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள், குழந்தைகள்மீது பட்டால் என்ன ஆவது?' என்றார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மகேஸ்வரனை தகாத வார்த்தைகளில் திட்டி சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்ப போயர் வீதியைச் சேர்ந்த கார்த்திக், புவியரசன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது நண்பர் விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...