பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய கைதி சிக்கினான்!

கோவை: மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற கைதி மீண்டும் சிக்கினான்.


கோவை: மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற கைதி மீண்டும் சிக்கினான்.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 20). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த 11-ஆம் தேதி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிரபுவை அவிநாசி கிளைச் சிறையில் அடைக்க இருந்தனர்.

அவிநாசி சிறையில் அடைப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென்பதற்காக பிரபுவை சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தைச் சென்றடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்கிய கொள்ளையன் பிரபு சப் இன்ஸ்பெக்டர் ரேவதிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். தப்பி ஓடிய கொள்ளையன் பிரபு ஓசூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். பின்னர் அவனை கோவைக்கு அழைத்து வந்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...