பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ 25 ஆயிரம் அபராதம்!

கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு மீண்டும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கடை வீதி, காந்தி மண்டபம், கோட்டூர் ரோடு மற்றும் சத்திரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 40க்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கடைகளில் டாக்டர் ராம்குமார் நகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட 1200கிலோ பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்த நகர் நல அலுவலர் 25 ஆயிரத்து ரூபாய் அபராதம் விதித்தார்.

மேலும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...