நீலகிரியில் மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு!

நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் சாமி என்ற குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.


நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் சாமி என்ற குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கிலிப்பி என்ற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு மது போதையில் சாமி மற்றும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்குக்கிடையே ஏற்பட்ட தகராறில் சாமி என்பவர் உன்னி கிருஷ்ணன் என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.



அதில் குற்றவாளி சாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளி சாமியை காவல் துறையினர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...