தமிழகத்தில் 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பு துவக்கம்!

கோவை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.


கோவை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.

முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி பேசுகையில், தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளதாகவும்

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர் என்றார்.

இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுக்கவில்லை எனவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் அவர்களுக்கான உரிமையை இழந்துவிடுவதால் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாத அமைப்பு எனவும் 143 சமுதாயத்தின் ஒரே குரலாக இந்த அமைப்பு இருக்கும் எனவும் எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி இந்த அமைப்பினர் உழைப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும், இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல சமூகத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார். பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கோவையில் நடத்த உள்ளதாகவும் இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...