கோவை: வரும் 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வாகனங்கள் தயார் செய்யும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

வாகன வடிவமைப்பு பணிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் கோவையைச் சேர்ந்த "கோயாஸ்" என்ற தனியார் நிறுவனம் சிறந்த முறையில் பிரச்சார வாகனத்தை வடிவமைப்பதன் காரணமாக இங்கு வடிவமைக்கப்படுவதை பெரும்பாலான அரசியல் கட்சியினர் விரும்புகின்றனர்.

இந்நிலையில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சார வாகனங்களை தயார்படுத்தும் பணியில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கோயாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் "ரியாஸ்" கூறுகையில், 50 ஆண்டு காலமாக இந்நிறுவனம் கோவையில் செயல்பட்டு வருவதாகவும் தமிழக தலைவர்கள் மட்டுமன்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு பிரச்சார வாகனங்களும் பாதுகாப்பு வாகனங்களையும் கடந்த 50 வருடங்களாக சிறந்த முறையில் தயாரித்து வடிவமைத்துக் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, வாகனத்தில் தலைவர்களின் இருக்கைகள் சுழலும் இருக்கை வசதியுடன் வடிவமைக்கப்படுவதாகவும் இதனால் இருக்கையில் அமர்ந்தபடியே பிரச்சாரம் மேற்கொள்ளும் விதமாகவும் நவீன தொழில் நுட்பங்களுடன் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ள "ஹைட்ராலிக் லிப்டிங்" மற்றும் "மேனுவல் லிப்டிங்" வசதியுடன் வாகனத்தின் நடுவே மேடையில் நின்று பேசுவதற்கு இரண்டு விதமான நவீன தொழில் அமைப்புடன் செய்து கொடுக்கப்படுவதுடன் பிரச்சாரத்தின் போது நீண்ட தூரம் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது ஓய்வெடுக்க வசதியாக படுக்கை வசதி, முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசக்கூடிய சோபா போன்ற அமைப்புடன் கூடிய இருக்கை வசதிகளை வடிவமைத்து தருவதாக கூறினார்.
அதேபோல, தலைவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பொழுது தொண்டர்கள் பார்க்கும் விதமாக சிறப்பு ஒளி அமைப்பு, பிரச்சாரத்தின் போது தலைவர்கள் பேசுவதை துல்லியமாக கேட்கக்கூடிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய (ஒலி) சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பிற்காக வரக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு கைப்பிடி வசதிகளுடன் கூடிய படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கப்படுவதாகவும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சார வாகனங்கள் தங்களது நிறுவனத்தில் தயார் செய்து வருவதாக கூறிய அவர், இன்னும் சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்றார்.