திருப்பூர்: `என்னை உங்களால் ஒன்றும் பண்ண முடியாது.. தலைமை நான் சொல்றததான் கேட்கும், கொடுக்க வேண்டியதை கொடுத்திடுறேன்' என்று அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்படும் தி.மு.க செயலாளர் சவடாலாக கூறியிருக்கிறார்.

தாராபுரம் தி.மு.க நகரச் செயலாளராக இருப்பவர் தனசேகர். இவர் ஆளும் அ.தி.மு.கவினருடன் இணக்கமாக இருப்பது மட்டுமல்லாமல், தி.மு.க கரைவேட்டி கட்டியபடி அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் இவரது செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில், தாராபுரம் நகர கூட்டுறவு சங்கத்துக்கு அ.தி.மு.கவினர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, தி.மு.க கரைவேட்டியுடன் சென்று, அவர்கள் அருகே நின்று அ.தி.மு.கவினரின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இப்படிச் செயல்படும் அவர் அ.தி.மு.கவுக்கு மாறிவிடலாமே என கமெண்ட் அடித்த பகுதி தி.மு.கவினர் கட்சித் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், தனசேகர்மீது இதுவரை தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்காதது தாராபுரம் பகுதி தி.மு.கவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
`என்னை உங்களால் ஒன்றும் பண்ண முடியாது.. தலைமை நான் சொல்றததான் கேட்பாங்க, கொடுக்க வேண்டியதை கொடுத்தர்றேன்ல' என ஓபனாகவே திமுக நிர்வாகிகளிடம் பேசும் தனசேகரை கண்டு கழக உடன்பிறப்புகள் தலையில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், அ.தி.மு.க தொண்டர்களை மதிக்கும் அளவுக்குக்கூட, சக தி.மு.க நிர்வாகிகளை தனசேகர் மதிப்பதில்லை எனவும் அ.தி.மு.கவினர் முன்னிலையில் வைத்தே தங்களை அவமானப்படுத்துவதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டுகின்றனர். தனசேகரை இப்படியே தலைமை கண்டுகொள்ளாமல் விட்டால், இந்தத் தொகுதியில் தி.மு.க தலையில் தனசேகரே மண்ணை வாரி போட்டுவிடுவார் என தி.மு.கவினர் குமுறுகின்றனர்.
மேலும், விரைவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நகரச் செயலாளர் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்குள் தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் தி.மு.கவினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.