வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம்!

கோவை: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.



வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர் போராட்டத்தை அறிவித்ததார். அதன் அடிப்படையில் கடந்த 1-ம் தேதி முதல் 4-ந்தேதி வரை ரயில் மறியல் போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.



சென்னையில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டப் போராட்டமாக, 621 கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகம் முன் பா.ம.க.சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி கோவையில் இன்று பல்வேறு இடங்களில் பாமகவினர் கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை பீளமேடு புதூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் கோவை ராஜ் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அசோக்ஸ்ரீநிதி தலைமையில் கலந்துகொண்ட பாமகவினர் கட்சி கொடி, வன்னியர் சங்க கொடி, மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சாலைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்ற பா.ம.கவினர் செளரிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேவிகாவிடம் வன்னியர் மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில துணைச் செயலாளர் அசோக்ஸ்ரீநிதி, ``வன்னிய மக்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என்றும் இடஒதுக்கீடு அளிக்கும்வரை போராட்டம் ஓயாது. இடஒதுக்கீடு அளிக்காதபட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் இதைவிட 100மடங்கு பெரிய போராட்டமாக இருக்கும்'' என்றார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...