தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும் வட இந்தியர்கள் நம் வரிப்பணத்தின் மூலம் பயன்பெறுகின்றனர் என்று திமுக வேதனை!

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்கும் வட இந்தியர்கள் தற்போது நாம் கட்டுகிற வரிப்பணத்தில் படித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வினால் நாம் மருத்துவராவதையும் இழந்திருக்கிறோம் என்று திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்கும் வட இந்தியர்கள் தற்போது நாம் கட்டுகிற வரிப்பணத்தில் படித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வினால் நாம் மருத்துவராவதையும் இழந்திருக்கிறோம் என்று திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேதனை தெரிவித்துள்ளார்.



`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்னும் நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா, பெரியார் ஆகியோரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேசினார். அப்போது அவர்,``2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சராக அமரப் போகிறார். இந்தப் போலி விவசாயியாலோ , ஆன்மீக அரசியல்வாதியாலோ ஏன்... நரேந்திர மோடியாலும்கூட இதைத் தடுக்க முடியாது. 2021 ஆம் ஆண்டு நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்'' என்றார்.



தொடர்ந்து அவர் பேசும்போது, ``திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்காகவும் நடத்தப்படும் ஓர் இயக்கம். நீட் தேர்வினால் மருத்துவராவதை நம் பிள்ளைகள் இழந்திருக்கின்றனர், வட இந்தியர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாம் கட்டுகிற வரிப்பணத்தில்தான் படித்து வருகிறார்கள்'' என்றார்.



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தற்போது தமிழகத்தில் 15 குழுக்களாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். போலி விவசாயியான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் மக்கள் சந்திக்கும் இன்னல்களைக் கேட்டறிந்து, அவற்றையெல்லாம் போக்கிட ஓர் அறிக்கையாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்போம். 2021 ஆம் ஆண்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்களது கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும்'' என்றார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...