கோவை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கோவை பிள்ளையார் பக்தர்கள் பேரவை சார்பில் காந்திபார்க் முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள்மன்றம் சார்பில் ரஜினிகாந்த் 71-வது பிறந்தநாளையொட்டி, கோவை பிள்ளையார் பக்தர்கள் பேரவை மற்றும் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் காந்திபார்க் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவின்போது, 71 பெண்களுக்கு சேலைகள்,மாணவ மாணவியர் 71 பேருக்கு பாடப் புத்தகங்கள், மேலும், காந்திபார்க் தாய் சேய் நல மையத்தில் 71 கர்ப்பிணிப் பெண்களுக்கு பழங்கள், ரொட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, ரஜினிகாந்த் மக்கள் மன்ற தெற்கு மண்டல செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். பிள்ளையார் பக்தர்கள் பேரவையின் பொறுப்பாளர் ஆர். பிரேம்நாத் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மேலும், டி.கே மார்க்கெட் மாப்ள வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார்.