வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரிக்கை: கோவையில் 300க்கும் மேற்பட்ட பாமகவினர் மனு அளிக்கும் போராட்டத்தில் பங்கேற்பு...!

கோவை: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர் போராட்டத்தை அறிவித்ததார். அதன் அடிப்படையில் கடந்த 1ம் தேதி முதல் 4 தேதி வரை இரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் போன்றவை சென்னையில் நடைபெற்றது.

கோவை: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர் போராட்டத்தை அறிவித்ததார். அதன் அடிப்படையில் கடந்த 1ம் தேதி முதல் 4 தேதி வரை இரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் போன்றவை சென்னையில் நடைபெற்றது. 



இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போராட்டமாக, 621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு, பா.ம.க.சார்பாக மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். 



அதன்படி, இன்று கோவையில் பல்வேறு இடங்களில் பாமகவினர், கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பீளமேடு புதூர் பகுதியில் நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட பாமவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். 



மாநில துணை பொதுச்செயலாளர் கோவை ராஜ் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக்ஸ்ரீநிதி தலைமையில் கலந்துகொண்ட பாமகவினர் கட்சி கொடி, வன்னியர் சங்க கொடி, மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பதாகைகளை ஏந்தியவண்ணம்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



அதிக கூட்டம் கூடியதால், காவல்துறையினர் தடுப்புகள் மற்றும் கயிறுகள் கொண்டு போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, சாலை முன்பாக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்திய பாமகவினர் ஊர்வலமாக சென்று செளரிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேவிகாவிடம் வன்னியர் மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர். 

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட பாமக மாநில துணை செயலாளர் அசோக்ஸ்ரீநிதி பேசுகையில், பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் தலைமையில் தற்போது நடைபெற்று வரும் வன்னிய மக்களுக்கான 20% இட ஒதுக்கீடு போராட்டத்தினை வெற்றி பெற செய்வோம் என்றும் இடஒதுக்கீடு அளிக்கும் வரை அன்புமணி தம்பி மற்றும் தங்கைகளின் இந்த போராட்டம் ஓயாது என்று தெரிவித்தார். 

மேலும், இடஒதுக்கீடு பெருவதில் கோவை மாவட்ட பாமகவினர் அயராது பாடுபடுவோம் எனவும் இடஒதுக்கீடு அளிக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் என்பது தற்போது நடைபெற்ற போராட்டத்தினை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும், எனவும் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...