திருப்பூர்: வேளாளர் பெயரை மாற்ற சமூகத்தினருக்கு பரிந்துரைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கொங்கு மக்கள் முன்னணியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் பட்டியல் சமூக பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய 7 சமூகங்களை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரி வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதில் வேளாளர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் கொங்கு மக்கள் முன்னணி சார்பில் இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன் சாலை மறியல் நடைபெற்றது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 30 மேற்பட்டோரை திருப்பூர் வடக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.