கோவை: வால்பாறையில் காலைக்கடன் கழிக்க சென்றவரை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சேடல் அணை செண்ணியப்பா எஸ்டேட் பகுதியில் கனகராஜ் என்பரது வீட்டிற்கு அவருடைய தாத்தா, ராசு (75). திருச்சிபமணப்பாறையில் விருந்தினராக வந்துள்ளார்.
இன்று காலை 6 மணி அளவில், அந்த முதியவர் காலைக்கடனை கழிக்கச் செல்லும்போது, புதரில் பதுங்கியிருந்த கரடி அவரை தலைப்பகுதியில் கடித்துள்ளது. யாரும் உதவிக்கு இல்லாததால், தனி நபராக அந்த கரடியிடம் போராடிய அவர், பலத்த காயங்களுடன் வீடு திரும்பி உள்ளார்.
இதனை, அறிந்த பேரன் கனகராஜ் வனத்துறைக்கு தெரிவிக்கவே, உடனே அப்பகுதிக்கு மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் மற்றும் ஃபாரஸ்ட் ஷேக் உமர் வன தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பின், காயமடைந்த அந்த முதியவருக்கு, சோலையார் அணை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 35 தையல்கள் போடப்பட்டது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் கூடிய பொது மக்கள், கூண்டு வைத்து அக்கரடியை பிடிக்க வேண்டும், என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.