காய்கறி கடைக்காரர்களுக்கும்‌ நன்றி சொல்லுங்கள் - ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌!

கோவை: “நீங்கள்‌ அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும்‌, அங்கு பணியாற்றும்‌ ஊழியர்களின்‌ சேவையை அங்கீகரிக்கும்‌ விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்‌” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.


கோவை: “நீங்கள்‌ அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும்‌, அங்கு பணியாற்றும்‌ ஊழியர்களின்‌ சேவையை அங்கீகரிக்கும்‌ விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்‌” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

உலக சில்லறை வர்த்தக ஊழியர்கள்‌ தினமான இன்று (டிசம்பர்‌ 12) World Retail Employees day சத்குரு தனது டிவிட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள வீடியோவில்‌ கூறியிருப்பதாவது:

வணக்கம்‌, உலக சில்லறை வர்த்தக ஊழியர்கள்‌ தின வாழ்த்துக்கள்‌. ஆன்லைன்‌ வர்த்தகம்‌ என்பது பிரபலம்‌ அடைந்து வரும்‌ சூழலிலும்‌ சில்லறை வர்த்தக துறையின்‌ ஊழியர்கள்‌ பல வழிகளில்‌ நமக்கு சேவையாற்றி வருகிறார்கள்‌ என்பதை நாம்‌ மறக்க கூடாது. மளிகை பொருட்கள்‌ விற்பனையில்‌ தொடங்கி பல விஷயங்களை அவர்கள்‌ நமக்கு கிடைக்க உதவியாக உள்ளார்கள்‌.

இந்தியாவில்‌ 4.6 கோடி பேரும்‌, உலகம்‌ முழுவதுமாக சேர்த்து 50 கோடிக்கும்‌ அதிகமான ஊழியர்கள்‌ நம்‌ வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள்‌ நமக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றனர்‌. நம்முடைய சமூக, பொருளாதார சூழலில்‌ மிக முக்கிய பங்காற்றினாலும்‌, அதிகம்‌ கவனம்‌ ஈர்க்கப்படாமல்‌ இருக்கும்‌ இந்த வீரர்களுக்கு நாம்‌ உரிய அங்கீகாரம்‌ அளிக்க வேண்டும்‌.

நீங்கள்‌ அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும்‌, அவர்‌ தக்காளி, உருளை கிழங்கு போன்ற காய்கறிகளை விற்கும்‌ சிறு விவசாயியாக இருந்தாலும்‌ சரி அல்லது வேறு எந்த பெரிய கடைக்கு சென்றாலும்‌ சரி அங்குள்ள ஊழியர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள்‌, வணக்கமோ, நன்றியோ சொல்லி அவர்களின்‌ சேவையை அங்கீகரியுங்கள்‌. இது மிக மிக முக்கியமானது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும்‌ அவர்கள்‌ தங்கள்‌ உயிரை பணையம்‌ வைத்து நமக்கு அனைத்து தளங்களிலும் சேவையாற்றி வருகிறார்கள்‌. அவர்களுக்கு என்னுடைய நன்றிகளையும்‌ வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ சில்லறை வர்த்தக அமைப்புகளுக்கான அறக்கட்டளை சார்பில்‌ கடந்த 2011-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 12ம்‌ தேதி உலக வர்த்தக ஊழியர்கள்‌ இனமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...