கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், அப்பகுதியில் காய்கறி ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களின் விவரங்கள் குறித்தும், வாகனங்கள் உள்ளே வரும் நேரம் மற்றும் வெளியே செல்லும் நேரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், குறிப்பிட்ட நேரங்களுக்கு மேல் வாகனங்களை உள்ளே நிறுத்தக்கூடாது எனவும், வியாபாரிகளிடம் மார்க்கெட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும், குப்பைகளை டின்கள் மூலம் சேகரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், காய்கறிக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது என தெரிவித்தார்.

தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள், தற்போது பேருந்துகள் வெளியே நின்று செல்வதால் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் அப்பகுதியில் இயங்கி வந்த வெங்காய மார்க்கெட்டை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை ஓட்டியுள்ள வடக்கு பகுதியிலுள்ள காலி மைதானத்தில் செயல்படும் என தெரிவித்தார்.
பின்னர், வியாபாரிகளிடம் காய்கறிக்கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் அ.ஜெ.செந்தில் அரசன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி திட்டம்) சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.