வரும் 14ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

கோவை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச., 14ம் தேதி (திங்கட்கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


கோவை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச., 14ம் தேதி (திங்கட்கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

பின்னர், இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 14ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, போராட்டத்தின் அடுத்த கட்டமாக துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட புறநகர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.



இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி, திருஞானசம்பந்தம், வி.ஆர் பழனிசாமி, கொங்கு விவசாயிகள் சங்கம் கிருஷ்ணசாமி, கனகரத்தினம், மக்கள் அதிகாரம் ராஜன், தமிழக விவசாயிகள் சங்கம் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...