கோவை: தங்க நகைகளை பட்டறை உரிமையாளரே தங்கத்தை மறைத்து வைத்து விட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டுவதுடன் தங்களை அலைக்கழிப்பதாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் ஏராளமான தங்க நகை பட்டறைகள் இயங்கி வருகின்றன. செல்வபுரம் பகுதியில் உள்ள தங்க நகை பட்டறைகளில் வடமாநிலத்தவர் உட்பட ஆயிரக்கணக்கானர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னையராஜபுரம் பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான பட்டறையில் பதினோறு பேர் வேலை செய்து வரும் நிலையில், 650 கிராம் தங்க நகைகள் காணாமல் போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இந்த நிலையில், உரிமையாளரே நகைகளை மறைத்து வைத்துவிட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டுவதுடன் தங்களை அலைக்கழிப்பதாகக் கூறிய அந்த பட்டறையில் பணியாற்றி ஊழியர்கள், உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 31.10.2020 அன்று இரவு அனைவரும் பணிமுடித்து வீடு திரும்பிய நிலையில் மறுநாள் ஊழியர்கள் அனைவரையும் வர கூறியவர், 650 கிராம் தங்கம் காணாமல் போனதாகவும் அதற்கு ஊழியர்களே பொறுப்பு என கூறியதாக தெரிவித்தார். பலமுறை இவ்வாறு தங்கம் காணவில்லை என கூறும் உரிமையாளர் பின்னர் கிடைக்கப் பெற்றுவிட்டது என தெரிவித்து உள்ளார் எனவும் தங்கத்தை பட்டறை உரிமையாளரே மறைத்து வைத்துவிட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டுவதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதால் விசாரணை என்ற பெயரில் கடந்த 45 நாட்களாக காவல் நிலையத்தில் தங்களை அலைக்கழிப்பதாகக் குற்றம் சாட்டினர். மேலும் பட்டறை ஊழியர்களின் வீட்டில் சோதனை என்ற பெயரில் அங்கு பணி செய்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி சோதனை செய்வதின் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்த அவர்கள், காணாமல் போனதாக உரிமையாளர் பாபு அவர்கள் கூறும் குற்ற்சாட்டை போலீசார் விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ய புகார் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.