நடிகர் ரஜினிகாந்த்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அவரது ரசிகர்கள் சார்பில் சிறப்பு யாகம்!

கோவை: நடிகர் ரஜினிகாந்த்தின் 71வது பிறந்தநாளை ஒட்டி அவர் நீண்ட ஆயுளைப் பெற வேண்டி கோவையில் அவரது ரசிகர்கள் சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.


கோவை: நடிகர் ரஜினிகாந்த்தின் 71வது பிறந்தநாளை ஒட்டி அவர் நீண்ட ஆயுளைப் பெற வேண்டி கோவையில் அவரது ரசிகர்கள் சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி அவரது ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அவரின் 71வது பிறந்த நாளையொட்டி கோவை தெற்கு மண்டலம் செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமையில் கோவை சலிவன் வீதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோவிலில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.

இந்த யாகத்தின் போது ரஜினி நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்களால் பிரார்த்தனை செய்யப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு மண்டலம் செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த்தின் வெற்றிக்காக தங்கள் குடும்பம் முழுவதும் சேர்ந்து உழைக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பிரேம் நாத் பிரவீன் குமார், ரவி, செந்தில் குமார், சீனிவாசன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...