கோவை: கோவையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பாக மரக்கிளைகளை துகள்களாக மாற்றும் இயந்திரம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வலுவிழந்த மற்றும் முறியும் தருவாயில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது வழக்கம். இதன் மூலம் மழை காலங்களில் மரக்கிளைகள் சாலைகளிலோ அல்லது மக்கள் மீதோ விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் தவிர்க்கப்படுகிறது.
அவ்வாறு வெட்டப்படும் மரக்கிளைகள் மற்றும் தானாக விழும் மரக்கிளைகள் சாலையோரங்களில் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சிலர் அதன் மீது குப்பைகளையும் கொட்டி அப்பகுதியை குப்பை கொட்டும் இடமாகவும் மாற்றிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இந்நிலையில், இதனை தவிர்க்கும் விதமாக மரக்கிளைகளை இயந்திரம் மூலம் துகள்களாக மாற்றி மீண்டும் அதே மரத்திற்கு உரமாக போட வேண்டும் என மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பாக கோவை மாநகராட்சிக்கு இந்த இயந்திரம் டிராக்டர் உடன் இணைத்து வழங்கப்பட்டது. தற்போது இந்த இயந்திரம் மரக்கிளைகளை துகள்களாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மேற்கு மண்டல ஸ்வச் பாரத் தூதர் மேனகா கூறுகையில், "ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பாக கோவை மாநகராட்சிக்கு இந்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த கிளப்பின் முன்னாள் தலைவர் சீத்தாராமன் தான். இந்த இயந்திரம் டிராக்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மரக்கிளைகள் உள்ள இடத்திற்கு நேரடியாக சென்று அங்கேயே இந்த இயந்திரம் மூலம் மரக்கிளைகள் துகள்களாக மாற்றப்படுகிறது. அதே மரத்திற்கு உரமாக போடப்படுகிறது. மீதம் உள்ளவை மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் உதாரணத்திற்கு 8 லாரிகளில் எடுத்துச் செல்லக்கூடிய மரக்கிளைகளை துகள்களாகா மாற்றி ஒரே லாரியில் எடுத்துச் செல்ல முடியும். இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் இருக்கும்," என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது மேற்கு மண்டல பகுதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேவைப்படும் இடங்களுக்கு இந்த இயந்திரம் அனுப்பிவைக்கப்படும்," என்று தெரிவித்தார்.