நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு - மலைரயிலை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

நீலகிரி: பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகையில் மலைரயிலை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


நீலகிரி: பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகையில் மலைரயிலை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ரயிலுக்கு பாரம்பரிய சின்னம் என்று யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மலை ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



வழக்கம் போல் மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், TN 43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மலை ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வாரத்தில் சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனத்தினரால் கடந்த 5 மற்றும் 6-ம் தேதி இரண்டு நாட்கள் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது, அதில், உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.3000 வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தை எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை உயர்த்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே நிர்வாகம் உதகை வரை பயணக் கட்டணமாக நூறு முதல் 500 வரைக்கும் குறைவாக பெற்று வந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் கட்டணக் கொள்ளை அனைவரிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மலை ரயிலின் பாரம்பரிய சின்னத்தை மறைத்து TN 43 என்று பெயர் பலகையுடன் கடந்த வாரம் இயக்கப்பட்டது. இன்று வந்த இந்த ரயிலில் பெயர் பலகை மட்டும் அகற்றப்பட்டு, அதே கட்டணத்தில் இயக்கப்பட்டது.

இதையடுத்து, மலை ரயிலை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 160 சுற்றுலாப் பயணிகளுடன் சனிக்கிழமை உதகை வந்த மலை ரயிலை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, ரயில்வே நிர்வாகம் நேரடியாக மலை ரயிலை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த மலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...